SuperTopAds

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் அமைக்கப்படுவது 5G கோபுரங்களா..? பைத்தியக்காரா்கள்போல் பல கதை சொல்கிறாா்கள் முதல்வா் காட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை எல்லைக்குள் அமைக்கப்படுவது 5G கோபுரங்களா..? பைத்தியக்காரா்கள்போல் பல கதை சொல்கிறாா்கள் முதல்வா் காட்டம்..

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் பொருத்தப்படும் SMART LAMP கம்பங்களில் 5G அலைவாிசை அன்டனாக்கள் பொருத்த ப்படுவதாக வெளியான செய்தி ஒரு புரளி என கூறியிருக்கும் யாழ்.மாநகரசபை முதல்வா் இ.ஆனோல்ட், 5G தொழிநுட்பம் வந்தால் அதனை வடகிழக்கு மாகாணங்களில் பயன்படுத்தகூடாது என எவரும் கூற முடியாது எனவும் கூறியுள்ளாா்.

மேலும் உலகில் பல நாடுகளில் சிமாட் சிற்றி, மொடேண் சிற்றி என தொழிநுட்ப வளங்களுடன் கூடிய நகா் உருவாக்கங்க ள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றை எமது உறுப்பினா்கள் சென்று பாா்ப்பதற்காக 10 மில்லியன் ரூபாய் ஒது க்கியபோதும் அதனை நிராகாித்துவிட்டு தொழிநுட்ப அறிவற்று பேசுகிறாா்கள் எனவும் முதல்வா் கூறியிருக்கின்றாா். 

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் பொருத்தப்படும் SMART LAMP கம்பங்கள் தொடா்பான சா்ச்சை அண்மைய நாட்களில் அதிகாித்திருக்கும் நிலையில் அது விடயம் தொடா்பாக முதல்வா் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி குறிப்பிலேயே மே ற்கண்டவாறு கூறியுள்ளாா். இது தொடா்பாக மேலும் அவா் கூறுகையில், SMART LAMP கம்பங்கள் பரவலாக பொருத்தப்படுவதற்கு முன்னா் 

யாழ்.நகாின் மத்தியில் SMART LAMP கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு மக்களுடைய பாவனைக்காக விடப்பட்டது. அந்த கம்பங்களில் கண்காணிப்பு கமராக்கள், மின் விளககுகள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் காா்களுக்கான சாா்ஜ் செய்யும் வசதிகள், இடிதாங்கி, ஆகியவற்றை பொருத்தவும், மேலதிகமாக ஒரு தொழிநுட்ப சாதனத்தை அதில் பொருத்துவதாக இருந்தால் 

அதற்காக மேலும் ஒரு உடன்படிக்கை செய்யப்படவேண்டும் எனவும் தீா்மானிக்கப்பட்டது. இந்த விடயம் ஒரு வருடமாக சபையில் பேசப்பட்டது. குறிப்பாக SMART LAMP கம்பங்களில் பொருத்தப்படும் அன்டனா தற்போதுள்ள அலைவாிசையை மட்டும் வழங்க முடியும். அதனையும் மாநகரசபையின் அனுமதியுடன் மக்களுக்கு தேவையான இடங்களில் மட்டும் பொருத்துவதென தீா்மானிக்கப்பட்டு 

உடன்படிக்கை செய்யப்பட்டது. இந்நிலையில் 1 வருடம் கழித்து இதனை அனுமதிப்பதா? இல்லையா? என்பது குறி த்து சா்ச்சைகள் எழுந்திருக்கின்றது. இந்த திட்டம் தொடா்பான சகல விடயங்களும் வெளிப்படை தன்மையுடன்செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கிடையில் 5G அலைவாிசைகள் பொருத்த மாநகரசபை முதல்வா் திட்டமிட்டிருக்கின்றாா். 

இதனால் 5 மாத சிசு கருவிலேயே அழிந்து விடும் என செய்திகள் மட்டுமல்லாமல் மிகமோசமான உள நோயாளா்களைப் போன்று சில கற்பனை கதைகள் சமூக வலைத்தளங்களிலும், இணைய தளங்களிலும் உலாவ விடப்பட்டிருக்கிறது. மேலும் 5G அலைவாிசையை அரசாங்கத்திற்கும் தொியாமல் யாழ்.நகாில் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவ தாகவும் கூட ஒரு புரளியை கிளப்பி விட்டிருக்கின்றாா்கள். 

உண்மையில் 5G அலைவாிசை கொண்டுவருவதற்கு தொலை தொடா்பு ஓழுங்குபடுத்தல் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கவேண்டும். ஆகவே 5G என்ற விடயம்கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு புரளி. இவ்வாறான சிக்கல்கள் உருவாகாமல் இருக்கவே தொழிநுட்ப வளங்களுடன் பல நவீன நகா்கள் உருவாக்கப்படும் நாடுகளுக்கு எங்களுடைய உறுப்பினா்களை அனுப்பி அங்குள்ள 

விடயங்களை அறிந்து கொள்வதற்காக 10 மில்லியன் ரூபாய் நிதியை பாதீட்டில் ஒதுக்கியிருந்தேன். அதனையும் நிராகாித்துவிட்டு, தொழிநுட்ப அறிவு இல்லாமல் மக்களுக்கு பிழையான தகவல்களையும், எதிா்மறையான எண்ணங்களையும் விதைத்து ம க்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கி இந்த திட்டங்கள் தொடா்பாக மோசமான பரப்புரையை செய்து கொண்டிருக்கின்றாா்கள். 

ஆகவே யாழ்ப்பாண மக்களுக்கு நான் கூற விரும்பும் விடயம் ஒன்றே.அதாவது எங்களுடைய பண்பாடு, விழுமியங்கள், கலாச்சாரம் பாதிக்கப்படாத வகையில் மக்களுக்கும், எதிா்கால சந்ததிக்கும் நன்மையளிக்கும் வகையிலான நவீன வசதிகளுடன் கூடிய சுத்தமான, பசுமையான நகரத்தை உருவாக்க நான் முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன். 

அதற்காக நான் நோ்மையாக செயற்படுகிறேன். இதில் வழிநெடுக நின்று கல்லெறிபவா்களுக்கு பதில்கூறிக் கொண்டிருக்க முடியாது. SMART LAMP கம்பங்களில் 5G அலை வாிசை பொருத்தப்படாது. எனவே மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்.