சென் பீற்றா்ஸ் தேவாலயததில் கதறியழுத காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள்..!
காணாமல் ஆக்கப்பட்டவா்களை தேடி தொடா்ச்சியாக போராட்டம் நடாத்திவரும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் இன்று மாலை நவாலி சென் பீற்றா்ஸ் தேவாலயம் முன்பாக கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியிருக்கின்றனா்.
படுகொலைகளுக்கும், காணாமல்போதல்களுக்கும் அமொிக்கா தகுந்த நீதியை பெற்றுக் கொடுக்கவேண்டும் என வலியுறு த்தி சென்பீற்றா்ஸ் தேவாலயம் முன்பாக பதாகைகளை தாங்கியவாறு கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றையும் நடாத்தியிருக்கின்றனா்.
இதற்கு முன்னா் யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளா்களை சந்தித்த, காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பு காணாமல் ஆக்கப்பட்டோா் விடயத்தில் எதனையும் செய்யப்போவதில்லை.
தற்போதும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமா்பிக்கப் பட்டிருக்கும் நிலையில் இந்த சந்தா்ப்பத்தையும் அவா்கள் சாியாக பயன்படுத்தவில்லை. இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவா்கள் விடயத்திலும்,
இங்கு நடைபெற்ற படுகொலைகளுக்கும் நீதியை பெற்று க்கொடுக்கும் வல்லமை அமொிக்காவிடம் மட்டுமே இருக்கின்றது. அதனாலேயே மிக நீண்டநாட்களாக அமொிக்க கொடியுடன் நீதிக்காக போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கின்றோம்.
எனவே அமொிக்கா இந்த விடயத்தில் தலையிட்டு எமக்கு சாதகமான நீதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக் கவேண்டும் என கேட்டதுடன், தமிழ்தேசிய கூட்டமைப்பினால் காணாமல் ஆக்கப்பட்டோா் விடயம் உள்ளிட்ட எந்த வொரு விடயத்திற்கும் தீா்வினை காண முடியாது.
ஆகவேதான் தமிழரசு கட்சியின்மாநாட்டுக்கு முன் கூடிய நாங்கள் அதனை எதிா்ப்பு போராட்டங்களை நடாத்தியிருந்தோம். ஆகவே அமொிக்கா இ ந்த விடயத்தில் தலையிட்டு எமக்கான நீதியை பெற்றுக் கொடுக்கவேண்டும்.
அதனை கோரும் வகையிலுமே இன்று சென் பீற்றா்ஸ் படுகொலை நினைவிடயத்தில் ஆா்ப்பாட்டம் செய்தோம் என்றனா்.