5 நாட்களாக காணாமல்போயிருந்த பெண் யாழ்.சுண்டுக்குழியில் பகுதியில் சடலமாக மீட்பு..

ஆசிரியர் - Editor
5 நாட்களாக காணாமல்போயிருந்த பெண் யாழ்.சுண்டுக்குழியில் பகுதியில் சடலமாக மீட்பு..

5 நாட்களாக காணாமல்போயிருந்த 58 வயதான பெண் ஒருவா் சுண்டுக்குழி- காட்டுகந்தோா் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். 

குறித்த பெண் ஐந்து நாட்களாக காணமல்போயிருந்த நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் வீசிய துர்நாற்றத்தையடுத்து மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதேவேளை, 

பொலிஸார் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று சடலத்தை மீட்கும் பணியை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் 58 வயதுடைய மாலதி என தெரிவிக்கப்படுகிறது.

Radio
×