30 வருடங்களின் பின் தையிட்டி கலைமகள் சனசமூக நிலையத்திற்கு விடிவு..! அமைச்சா் மனோகணேசன் வருகிறாா்..

ஆசிரியர் - Editor I
30 வருடங்களின் பின் தையிட்டி கலைமகள் சனசமூக நிலையத்திற்கு விடிவு..! அமைச்சா் மனோகணேசன் வருகிறாா்..

வலிகாமம் வடக்கு தையிட்டி கலைமகள்  சனசமூகநிலையத்தை புனரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 12 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதற்கான அடிக்கல்லினை தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் மனோகணேசன் நாட்டி வைக்கவுள்ளார். இதற்காக 2 கோடி ரூபா நிதியை அமைச்சர் மனோகணேசன் ஒதுக்கியுள்ளார். 

மூன்று அடுக்கு மாடிகளைக்கொண்டதாக இந்த சனசமூக நிலையம் அமைக்கப்படவுள்ளது. 1990 ஆம் ஆண்டு இடப்பெயர்வுக்கு முன்பு இந்த சனசமூக நிலையம் பல்வேறு சிறப்பச்சங்களுடன் இயங்கி வந்தது.

இதில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட தெல்லிப்பளை பிரதேசசெயலர் பிரதேச சபை தவிசாளர் உட்பட பல அரச அதிகாரிகளும் பொது மக்களும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு