பனாமா காட்டில் கைவிடப்பட்ட யாழ் தமிழர் இறந்துவிட்டாரா? துணைவியார் மறுப்பு !

ஆசிரியர் - Admin
பனாமா காட்டில் கைவிடப்பட்ட யாழ் தமிழர் இறந்துவிட்டாரா? துணைவியார் மறுப்பு !

இந்தப் படத்தில் இருப்பவர் பெயர் தெரியாது. இவரது ஊர் யாழ் நகர் என அறியப்படுகிறது. மிகவும் உடல் திடகாத்திரம் கொண்ட இவர் பயணமுகவர்களூடாக பல நண்பர்களுடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றதாகவும். 

காடுகள் மலைகளை கடந்து பல நாள் பயணங்கள் சென்றவேளை மலையில் விபத்துக்குள்ளாகி காலில் காயமடைந்து கால்கள் வீங்கியநிலையில் நோய்வாய்ப்பட்டு கொலம்பியாவுக்கும் பனாமாவுக்கும் இடைப்பட்ட சதுப்பு நில காட்டுப்பகுதியில் சக பயணிகளாலும் பயணமுகவராலும் கைவிடப்பட்டு இறந்துவிட்டார் என சமூக வலைத்தள பதிவுகளில் செய்தி பகிரப்பட்டுள்ளது.

அன்பார்ந்த தமிழ் உறவுகளே இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாக அறியப்படுகிறது. இத்தகவலை யாழ் நகரை சார்ந்தவர்கள் பகிருங்கள். இவரது உறவுகள் அடையாளம் காண அறியும்வகை செய்யுங்கள். இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுங்கள். 

தாயகத்தில் போருக்கு பின்னரான காலப்பகுதி பத்து வருடங்களைக்கடந்துள்ள நிலையில். எமது சமூகம் தமது அரசியல் பாதுகாப்பு காரணங்களுக்காகவோ அன்றி பொருளாதார காரணங்களுக்காகவோ பாதுகாப்பற்ற சட்டவிரோத வெளிநாட்டு பயணங்களை தொடர்வதை நாம் விமர்சிக்க முடியாது. ஆனாலும் உயிரை பணயம் வைக்கும் பயணங்களை தவிர்க்குமாறு வேண்டிக்கொள்வோம்.

இது குறித்த உண்மையை தன்மையை அறிந்து கொள்ள இவரது பெயர் விபரம் தெரிந்தோர் தயவுசெய்து அறியத்தரவும். தொடர்பு - Jaffnazone@mail.com

என ஊடகங்களில் முன்னுக்கு பின் முரணான செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் வேளை எமது ஊடக வலையமைப்பு உறவினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி சில தகவல்களை அறிந்துகொண்டது அவற்றை இங்கே இணைத்துள்ளோம்.

துணைவியார் மறுப்பு !

இந்த செய்தியை கொழும்பிலுள்ள அவரது துணைவியார் மறுதலித்துள்ளார். தனது கணவர் உயிருடன் இருப்பதாக தான் நம்புவதாகவும். இதே படத்தை கணவர் ஏற்க்கெனவே தனக்கு அனுப்பியிருந்தார் எனவும் காலில் காயம்பட்ட தனது கணவர் பனாமாவிலுள்ள இராணுவ முகாம்களில் ஒன்றில் இருப்பதாக தான் அறிந்துள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் அதை உறுதி செய்ய மேலும் இரு வாரங்கள் காலதாமதம் கேட்டதாகவும். தெரிவித்துள்ளார்.

எனினும் காட்டில் கைவிடப் பட்டதாக சமூக வலைத்தளங்களில் கூறப்படும் பயண வாசியின் சகோதரன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில். தனது சகோதரன் பற்றிய தகவல்களில் இருட்டடிப்புகள் இருப்பதாக தாம் நம்புவதாக வேதனையுடன் தெரிவித்தார்.

தனது கவலைகளுக்கு அப்பாற்ப்பட்டு அவர் தெரிவித்த கருத்து ஒன்றை நாம் பதிவுசெய்வதில் தப்பில்லை. வெளிநாடொன்றில் நல்ல வேலைவாய்ப்பில் இருந்த தமது சகோதரர் இலங்கை வந்து ஏன் இப்படி ஒரு பயணத்தை ஆரம்பித்தார் என தாம் அறிந்திருக்கவில்லை எனவும் - செய்திகளை படித்தே அறிந்தேன் எனவும். இவ்வாறான நிலைமை யாருக்கும் வரக்கூடாது எனவும் தெரிவித்த அவர். இந்த பதிவை அகற்றிவிடவா என கேட்டபோது. படம் ஒன்று வெளிவந்துவிட்டது அதை கண்டு துவண்டுபோயுள்ளோம் . இனிமேலே எடுத்து என்ன விட்டு என்ன - நாலுபேர் இதை அறிவதால் சமூகம் விழிப்படையும் என தெரிவித்தார். சமூகவலைத்தளங்களில் பரவிய இந்த செய்தியை நாமும் பகிர்ந்தோம் வேதனை கொண்டுள்ளோம். இருக்கிறாரா இல்லையா என்கின்ற செய்திகளுக்கு அப்பால் அவருக்காக பிரார்த்திப்போமாக. கடந்த காலங்களில் இவ்வாறான பல ஐரோப்பிய அமெரிக்க பயணங்களில் பலர் காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


News : https://seithy.com/breifNews.php?newsID=227689&category=TamilNews&language=tamil

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு