SuperTopAds

நாடாளுமன்றில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு சவால் விடுத்துள்ள ஜே.வி.பி..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்றில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு சவால் விடுத்துள்ள ஜே.வி.பி..

தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்றால், மனச்சாட்டியுள்ள தலைவா்கள் என்னால் தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதாிக்கவேண்டும். என மக்க ள் விடுதலை முன்னணி தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு சவால் விட்டுள்ளனா். 

பிரதமர், அமைச்சரவை மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக இன்று சபையில் கொண்டுவந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

பாராளுமன்ற பெரும்பான்மையையும் மக்களின் ஆதரவையும் இழந்துள்ள இந்த அரசாங்கத்தை வீழ்த்த வேண்டிய கட்டாய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. எனவே இப்போது இந்த அரசாங்கம் பதவி நீங்கி மக்களுக்கு தமக்கான அரசாங்கம் ஒன்றினை உருவாக்க இடமளிக்க வேண்டும். 

இனியும் அதிகாரத்தில் இருக்க இந்த அரசாங்கத்திற்கு தகுதி இல்லை. அரசாங்கம் ஆட்சியில் இருக்க இதுதான் காரணம் என ஏதேனும் ஒரு காரணியை கூட கூற முடியாத நிலைமை இன்று உள்ளது. எனினும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க 

மக்களுக்கு உள்ள சந்தர்ப்பம் தேர்தல் ஒன்றுதான். அதற்கான வாய்ப்பை மக்களுக்கு கொடுக்க வேண்டும். அதனையே நாம் கேட்டு நிற்கின்றோம். இந்த அரசாங்கத்தை நீக்கி பாராளுமன்றத்தை கலைத்து மீண்டும் 

புதிதாக மக்களுக்கு அரசாங்கம் ஒன்றினை உருவாக்கிக்கொள்ள தேர்தலை அறிவிக்க வேண்டும்.