யாழ்.தீவக பகுதியை முற்றுகையிட்டிருக்கும் வலசை பறவைகள்..! தீவக கடற்கரையில் கூடும் மக்கள்.

ஆசிரியர் - Editor I
யாழ்.தீவக பகுதியை முற்றுகையிட்டிருக்கும் வலசை பறவைகள்..! தீவக கடற்கரையில் கூடும் மக்கள்.

யாழ்ப்பாணம் தீவக பகுதிகளில் காலநிலை மாற்றத்தை தொடா்ந்து வலசை பறவைகள் அதிகளவில் குடாநாட்டில் வந்து கொண்டிருக்கும் நிலையில், தீவக கடற்கரைகளில் வலசை பறவைகளை காண மக்கள் குவிந்து கொண்டிருக்கின்றனா். 

ஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி, சாட்டி ,வேலணை, மண்டைதீவு, ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி இந்த வெளிநாட்டு பறவை இனங்கள் வருகை தருகின்றன. இதனால் வெளிநாட்டிலிருந்து வரும் குறித்த பறவையினங்களை இரசிப்பதற்காக 

பலரும் குறித்த இடத்திற்கு வருவதோடு அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்இம் மாதக் கடைசியில் தீவகத்தில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்குகின்றன. இங்கு டிசம்பர் மாதம் வரும் வெளிநாட்டு பறவைகள் 

ஜனவரி பெப்ரவரி மாதம் கூடு கட்ட துவங்கும். மேற்குறித்த பறவைகள் 3000 மைல் தூரம் பறந்து செல்லும் வல்லமை படைத்தவை. ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ரஷியா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ், நைஜரியா, சைபிரியா ஆகிய நாடுகளிலிருந்து பறவைகள் இங்கு வருகின்றன. 

வலசை வந்து ஏப்ரல் மே ஜூன் ஜூலை மாதம் வரை தங்கி குஞ்சு பொரித்து பிறகு அவற்றுடன் பறந்து செல்கின்றன. 23 க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து கூடு கட்டுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர். 

இதில் நாரை இனங்கள் அன்னப்பறவை உள்ளிட்ட வலசை பறவையினங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு