மன்னாரில் வாக்காளர் பதிவு கேட்ட புத்தளம் வாசிகள், மறுத்த கிராமசேவகரை பள்ளிவாசலுக்கு அழைத்து அச்சுறுத்தல்...

ஆசிரியர் - Editor I
மன்னாரில் வாக்காளர் பதிவு கேட்ட புத்தளம் வாசிகள், மறுத்த கிராமசேவகரை பள்ளிவாசலுக்கு அழைத்து அச்சுறுத்தல்...

மன்னார் மாவட்டத்தில் வசிக்காமல் அல்லது மாவட்டத்தில் சொத்துக்களை வைத்திருக்காதோருக்கு மன்னார் மாவட்டத்தில் வாக்குரிமை வழங்க முடியாது என கூறிய கிராமசேவகர் பள்ளிவாசலுக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

நாடுபூராகவும் வாக்காளர் பதிவு இடம்பெறும் நிலையில் மன்னார் மாவட்டத்திலும் வாக்களர் பதிவுகள் இடம்பெறுகின்றன. இவ்வாறு பதிவுகள் இடம்பெறும் நிலையில் ஒரு கிராம சேவகர் தனது பிரிவிற்கு உட்பட்ட அனைத்து வீடுகளிற்கும் 

நேரில் சென்று படிவங்களை விநியோகித்த பின்பு அதனை பூரணப்படுத்தி ஒப்படைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும் வேறு சிலர் கிராம சேவகரை அனுகி தமது பெயர் விபரங்களும் இதே கிராமத்திலேயே உள்ளதனால் பதிவுகளை மேற்கொள்ள படிவங்களை கோரியுள்ளனர்.

ஆனால் குறித்த நபர்கள் புத்தளத்தை வதிவிடமாக கொண்டமையாலும், மன்னார் மாவட்டத்தில் சொத்துக்கள் எவையும் இல்லாமையினாலும் புத்தளம் பகுதியிலேயே வாக்காளர் பதிவை மேற்கொள்ளுமாறு கிராமசேவகர் அறிவுறுத்தியுள்ளார்.

இதன்பின்  குறித்த கிராம சேவகரை பள்ளிவாசல் நிர்வாகம் ஒன்று அழைத்துள்ளது. அங்கு சென்ற கிராம சேவகரிடம் பதிவினை மேற்கொள்ள கோரியபோது சட்ட ஏற்பாட்டைக்கூறி அந்த கிராம சேவகர் பதியவில்லை. 

இருப்பினும் அது தொடர்பில் அழுத்தம் ஏற்படவே கிராம சேவகர் குறித்த விடயத்தினை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இது தொடர்பில் மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர் ஜெனிற்றனை  தொடர்பு கொண்டு கேட்டபோது ,

குறித்த விடயம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதனையடுத்து இவ் விடயத்தை ஆராய்ந்த்தோடு சம்பந்தப்பட்ட சகல தரப்புக்களுடனும் தொடர்பு கொண்டேன். இந்த நிலையில் அங்கே கடமையாற்றிய கிராம சேவகர் சட்டத்தை மீறியதாக தெரியவில்லை. 

இருப்பினும் தற்போது இடம்பெறும் வாக்காளர் பதிவினையடுத்து மீளாய்விலும் முறையிட்டு அதன் முடிவின் பிரகாரமும் பதியப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு எனப் பதிலளித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு