SuperTopAds

கனடாவில் கண்ணீர் மல்க குடியுரிமை உறுதிமொழி எடுத்துக்கொண்ட வௌிநாட்டவர்கள்! - உருக்கமான நிகழ்வு.

ஆசிரியர் - Admin
கனடாவில் கண்ணீர் மல்க குடியுரிமை உறுதிமொழி எடுத்துக்கொண்ட வௌிநாட்டவர்கள்! - உருக்கமான நிகழ்வு.

வெவ்வேறு நாடுகளில் இருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்து கனடியக் குடியுரிமை பெற்றுக்கொண்ட மக்கள் பலர், கனடா தினத்தை முன்னிட்டு கண்ணீர் மல்க குடியுரிமை உறுதிமொழி எடுத்துக் கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று (திங்கட்கிழமை) நாடளாவிய ரீதியாக கனடா தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்து குடியுரிமை பெற்றுக்கொண்ட 52 ’புதிய கனடியர்கள்’ தங்கள் வலது கையை உயர்த்தி குடியுரிமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அந்த வகையில், இந்தியாவிலிருந்து 2015 ஆம் ஆண்டளவில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்த பிவ்யா என்பவரின் கணவர் கனடா சென்று 9 ஆண்டுகள் கழிந்த நிலையில், கடந்த ஆண்டுதான் தனது கனடியக் குடியுரிமையை பெற்றுக் கொண்டதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். கல்கரி விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிவ்யா ஜோர்ஜ் (Bivya George) என்ற பெண் இந்த நிகழ்வு தனது வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தானும் இப்போது கனடா குடியுரிமை பெற்றுள்ளதால், கனடாவை தனது சொந்த நாடு என அழைக்க வாய்ப்பு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோன்று உருகுவேயிலிருந்து கனடாவுக்குச் சென்றுள்ள அன்ட்ரியா லெய்டஸ் மற்றும் டியேகோ பெர்னான்டஸ் ஆகியோர் அவர்களது பிள்ளைகளுடன் கடந்த 10 ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்த நிலையில் தற்போதுதான் அவர்களுக்கு கனடாக் குடியுரிமை கிடைத்துள்ளது.

இதனிடையே, பிரியங்கா மதன் என்ற பெண் கடந்த ஐந்து வருடங்களாக கனடாவில் வசித்து வருவதாகவும், இந்த நிகழ்வு தங்களை சொந்த குடும்பம் போன்று உணரவைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.