5G கோபுரங்கள் அமைப்பதை நிறுத்துமாறு ஆளுநா் பணிக்கவில்லை..! செய்தி பொய்யாம்..

ஆசிரியர் - Editor I
5G கோபுரங்கள் அமைப்பதை நிறுத்துமாறு ஆளுநா் பணிக்கவில்லை..! செய்தி பொய்யாம்..

யாழ் நகரில் 5ஜி கோபுரங்களை அமைப்பதை 10 நாட்களுக்கு நிறுத்தும்படி ஆளுநர் பணிப்புரை வழங்கியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என ஆளுநா் அலுவலகம் கூறியுள்ளது. 

இது தொடா்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது யாழ் நகரில் 5ஜி கோபுரங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆளுநருக்கு கடிதமொன்றை நேற்று வழங்கியிருந்தார்கள்.

கௌரவ ஆளுநரின் அறிவுறுத்தலின்படி இதனுடன் தொடர்புடைய மாநகரசபை அதிகாரிகள் உள்ளிட்டோரை, 

ஆளுநருக்கு பதிலாக ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர் ஆகியோர் நேற்று காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து 

இது தொடர்பில் ஆராய்ந்திருந்தனர். மேலும் இந்த விடயம் தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவருவதுடன்,

 இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினருடன் இது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கே 

இக்கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது. ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் வெளிவந்திருப்பது போன்று

 "10 நாட்களுக்கு இந்த செயற்பாட்டினை நிறுத்தும்படி கௌரவ ஆளுநர் அவர்கள் உத்தரவு விடுத்துள்ளார் என்ற செய்தியில் எதுவித உண்மையுமில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு