ரஷ்யாவில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு - 18 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
சைபீரியாவில் உள்ள துலுன் மற்றும் இர்குட்ஸ்க் (Tulun and Irkutsk) ஆகிய இடங்களில் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி தற்போது வரை 18 பேர் உயிரிழந்த நிலையில், 17 பேர் மாயமாகி உள்ளனர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 300 பேர் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பின் நாடு திரும்பிய அதிபர் புதின் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார்.