சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அபுதாபியில் உலகிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையம்!
அபுதாபியில் உலகிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், சோலார் மின் உற்பத்தி திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், நூர் அபுதாபியில் 1,177 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையிலான சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி முடிவடைந்து தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 32 லட்சம் சோலார் பேனல்களை கொண்ட இந்த சோலார் மின் உற்பத்தி நிலையம் மூலம், ஒரு லட்சம் பேரின் மின்தேவை பூர்த்தியாகும்.
8 சதுர கிலோ மீட்ட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சோலார் மின் உற்பத்தி நிலையம், அபுதாபியில் கார்பன் டையாக்சைடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அபுதாபியில் சுமார் 20 ஆயிரம் கார்களை இயக்க தடை விதிக்கப்பட்டால் எவ்வளவு வாகன புகை கட்டுப்படுமோ அந்த அளவுக்கு இந்த சோலார் மின் உற்பத்தி நிலையம் மாசுபாட்டை குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.