SuperTopAds

டிக்டாக் செயலி மூலம் முக்கிய விஷயங்களை சீனா திருடுகிறது - திருவனந்தபுரம் எம்.பி!

ஆசிரியர் - Admin
டிக்டாக் செயலி மூலம் முக்கிய விஷயங்களை சீனா திருடுகிறது - திருவனந்தபுரம் எம்.பி!

டிக் டாக் செயலி மூலம் முக்கியமான தரவுகளை சீனா திருடி வருவதாக திருவனந்தபுரம் தொகுதி எம்பியான சசிதரூர் தெரிவித்துள்ளார். மக்களவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய அவர், டிக்டாக் செயலி மூலம் சட்டவிரோதமான முறையில் முக்கியத் தரவுகளை சீனா திருடி வருவதாகவும், இதனால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

சமீபத்தில் அமெரிக்கக் குழந்தைகள் குறித்த தகவல்களைத் திருடியதற்காக டிக்டாக் நிறுவனத்திற்கு அந்நாடு 5 புள்ளி 7 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார். ஸ்மார்ட் போன்கள், மக்களைக் கவரும் செயலிகள் மூலம் முக்கியத் தகவல்கள் திருடப்பட்டு வருவதாகவும் சசிதரூர் குறிப்பிட்டார்.

சீனத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மூலம் திருடப்படும் இந்தத் தகவல்கள் நமது தேசத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளதாக கவலை தெரிவித்த அவர், ஜனநாயகத்தைக் காப்பதற்கான வலுவான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.