உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து..! 27 வயது இளைஞன் உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor I
உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து..! 27 வயது இளைஞன் உயிாிழப்பு..

கிளிநொச்சி பகுதியில் மோட்டாா் சைக்கிள் ஒன்று உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 27 வயது இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா். 

காக்காகடைசந்தி ஊடாக வட்டகச்சி செல்லும் வீதியில் பயணித்த உந்துருளி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் 

நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றது. குறித்த விபத்தில் 27 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு