வடகிழக்கில் இராணுவ அடாவடி நாளுக்கு நாள் அதிகாிக்கிறது..!

ஆசிரியர் - Editor I
வடகிழக்கில் இராணுவ அடாவடி நாளுக்கு நாள் அதிகாிக்கிறது..!

இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை தொடா்ந்து வடகிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் அடாவடிகள் நாளுக்கு நாள் அதிகாித்துக் கொண்டிருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் நாடாளுமன்றில் கூறியுள்ளாா். 

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அவசரகால சட்டத்தை ஒருமாத காலத்துக்கு நீடிப்பது குறித்து இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே எஸ். ஸ்ரீதரன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, 

“அவசரகால சட்டம் தெற்கில் ஒருவகையாகவும் வடக்கு- கிழக்கில் ஒருவிதமாகவும் இயங்குவது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே பார்க்க தோன்றுகிறது.மேலும் வடக்கு- கிழக்கில் தமிழ் மக்களை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் 

என்பதுடன் சர்வதேச நாடுகள் தமது முழு அவதானத்தையும் இவ்விடயத்தில் செலுத்த வேண்டியதும் அவசியமாகும்.அந்தவகையில் குண்டுத் தாக்குதலையடுத்து பாதுகாப்புக்கான சோதனைகள் தெற்கு முழுவதிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வடக்கில் பாடசாலைகள் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் 

இராணுவம் குவிக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்படுகின்றன.குறிப்பாக தமிழ் மக்கள், மாணவர்கள் இராணுவப் பிரசன்னத்துடனேயே வாழ்வதானது தமிழ் மக்களை அடிமைப்படுத்தி வைக்க முனைவதை எடுத்துகாட்டுவதாக உள்ளது.இவ்வாறு தமிழ், முஸ்லிம் மக்களை துன்புறுத்தி அதனூடாக அரசியல் இலாபம் 

பெற்றுக்கொள்வதற்கு சிலர் முனைகின்றனர்.ஆகையாலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு அவசரகால சட்டத்தை எதிர்த்து வாக்களிக்கின்றது” என எஸ். ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு