பேசுவது தமிழ்தேசியம்.. அழிப்பது காடு.. அசிங்கப்பட்டாா் நாடாளுமன்ற உறுப்பினா் சாந்தி சிறிஸ்கந்தராசா..
முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 ஏக்கா் காட்டை அழித்து விவசாயம் செய்யும் தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினா் சாந்தி சிறிஸ்கந்தராசா அம்பலப்பட்டிருக்கின்றாா்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் பாண்டியன்குளம் பிரதேசத்தில் இவ்வாறு 12 ஏக்கர் வரையான காடு அழிக்கப்பட்டு நெற்செய்கை மெற்கொள்ளப்பட்டு வருவதாக
குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி அதிகாரிகளை அச்சுறுத்தி குறித்த காணி வசப்படுத்தப்பட்டுள்ளது. இன்றுவரை வனவளபாதுகாப்பு பிரிவினரோ, நீர்பாசன திணைக்களமோ அல்லது
மாவட்ட அரச அதிபரோ நடவடிக்கை மேற்கொள்ளமை ஏன் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.இதேவேளை பாலியாற்றின் எல்லை பகுதியையும் வேலியிட்டு ஆக்கிரமித்து விவிசாயம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
குறித்த பாலி ஆற்றிலிருந்து நீர் இறைக்கும் இயந்திரத்தின் மூலம் நீர் வயலுக்கு பாய்ச்சப்படுகின்றது. மக்களின் வாக்குகளால் தெரிவான அரசியல்வாதிகள் சுற்று சூழல் பாதுகாப்பு தொடரப்பில் மக்களிற்கு விழிப்புணர்வு
ஊட்டவேண்டிய நிலையிலும், பாதுகாக்க வேண்டியகடப்பட்டிலும் உள்ள நிலையில், அதிகளவான காடுகளை அழித்து தமது சந்ததிக்கு சொத்தாக்கிக் கொள்ள நினைப்பது தொடர்பிலும்,
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் மௌனம் காப்பது குறித்தும், கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.