SuperTopAds

ஒரே பிரசவத்தில் 2 கன்றுகள்; கரூர் அருகே அதிசயம்..!

ஆசிரியர் - Admin
ஒரே பிரசவத்தில் 2 கன்றுகள்; கரூர் அருகே அதிசயம்..!

கரூர் அருகே, பசு ஒன்று வழக்கத்துக்கு மாறாக இரண்டு கன்றுகளை ஈன்ற அபூர்வ சம்பவம் நடந்துள்ளது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை கொடிக்கால் பகுதியைச் சோ்ந்தவர் செல்வி. இவர், தனது வீட்டில் மாடுகள் வளர்த்து, அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், சினையாக இருந்த பசு ஒன்று நேற்று முன்தினம் அதிகாலை இரண்டு கன்றுகளை ஈன்றது. 

வழக்கமாக, பசுக்கள் ஒரு குட்டிதான் ஈன்றெடுப்பது வழக்கம். ஆனால், செல்வி வளர்க்கும் பசு இரண்டு காளைக் கன்றுகளை ஈன்றுள்ளது. கன்றுகள் இரண்டும் தாயிடம் பால் குடித்து, ஆரோக்கியத்துடன் துள்ளிக் குதித்து விளையாடுகின்றன. இந்தக் காட்சியை, அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

இது குறித்து கால்நடை டாக்டர்கள் கூறுகையில், “பசுவின் கர்ப்பப்பை வளர்ச்சியைப் பொறுத்து சில நேரங்களில் இது போல் இரண்டு கன்றுகள் பிரசவிக்கும். இதனால், பசுவுக்கும் கன்றுகளுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை” என்றனர்.