மரண தண்டணை தீா்மானத்தை எதிா்ப்போம்..! ஐ.தே.க போா் கொடி..
போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டணை கொடுக்கும் ஜனாதிபதியின் தீா்மானத்திற்கு ஆதரவு வழங்கப்படாது. அதனை வலுவாக எதிா்ப்போம் என ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினா் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஜனாதிபதி கூறியதை ஒருபோதும் செய்வதில்லை என சுட்டிக்காட்டிய அவர் மரண தண்டனையையும் செயற்படுத்த கூடாது என பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், மரண தண்டனை வழங்குவதால் மட்டும் குற்றங்களை ஒருபோதும் குறைக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் மரண தண்டனை குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் ஹர்ஷண ராஜகருணா
கோரிக்கை விடுத்துள்ளார்.