அவா் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை..! ஜனாதிபதி, பிரதமா் கூட எனக்கு அழுத்தம் கொடுப்பதில்லை..

ஆசிரியர் - Editor I
அவா் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை..! ஜனாதிபதி, பிரதமா் கூட எனக்கு அழுத்தம் கொடுப்பதில்லை..

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின்னா் கைது செய்யப்பட்ட சந்தேக நபா் ஒருவரை விடுதலை செய்யுமாறு முன்னாள் அமைச்சா் றிஷாட் பதியூதீன் தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என இராணுவ தளபதி கூறியிருக்கின்றாா். 

உயிரித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இன்று சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலுக்கு பின்னர் இராணுவத்தினர் நாட்டின் பல பகுதிகளில் தேடுதல்களை நடத்தி சந்தேகத்திற்குரியவர்களை கைது செய்தனர். 26 ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அன்றைய தினத்திற்கு மறுதினம் அமைச்சர் றிசார்ட் பதியூதீன் என்னை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளாரா என்று கேட்டார். 

இராணுவத் தளபதி என்ற வகையில் றிசார்ட் பதியூதீன் உட்பட பலரை எனக்கு தெரியும். அதேபோல் எனது தொலைபேசி இலக்கமும் அனைவருக்கும் தெரியும்.

றிசார்ட் பதியூதீன் கேட்டதற்கு தேடி அறிந்து கூறுவதாக சொன்னேன். பின்னர் புலனாய்வு பிரிவினரிடம் விசாரித்து அறிந்துக்கொண்டேன். மறுநாள் றிசார்ட் பதியூதீன் என்னை தொடர்புக்கொண்டார்.

ஆம் அப்படியான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினேன். எனினும் அவரை விடுதலை செய்யுமாறு அவர் எனக்கு அழுத்தங்களை கொடுக்கவில்லை.

அவர் மட்டுமல்ல, ஜனாதிபதி, பிரதமர் உட்பட எவரும் எனக்கு அழுத்தங்களை கொடுப்பதில்லை. நாங்கள் சுயாதீனமாக எமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு