கல்முனை முஸ்லிம்களின் தலைநகராம்..!

ஆசிரியர் - Editor I
கல்முனை முஸ்லிம்களின் தலைநகராம்..!

கல்முனை பிரதேசம் முஸ்லிம்களின் தலைநகா். அதனை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு இலங்கையில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கிறது. என கூறியிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயா் பீட உறுப்பினா் யஹ்யாகான்,

குழுக்களை அமைப்பதால் மட்டும் மக்களுடைய தேவைகளை நிவா்த்தி செய்ய முடியாது. பௌத்த பிக்குகளின் நிகழ்ச்சி நிரலுக்கு முஸ்லிம் மக்கள் அடிபணிய கூடாது எனவும் அவா் கூறியிருக்கின்றாா். 

இது குறித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, கல்­ முனை வடக்குஉப பிர­தேச செய­லகம் என்ற கோரிக்­கையை முன்­னி­றுத்தி தமிழ் சகோ­த­ரர்கள் முன்­னெ­டுத்­தி­ருந்த போராட்டம் அவர்­க­ளுக்­கான 

பிர­தேச செய­ல­கத்தை பெறு­வது என்­ப­தை­விட அடை­யா­ள­மற்று இருந்த சில அர­சி­ யல்­வா­திகள் தங்­க­ளது முக­வ­ரி­களை புதுப்­பிக்கும் நிகழ்­வாகும். கல்­முனை வடக்குஉப பிர­தே­ச செய­லகம் அவ­சியம் என்று அந்த மக்கள் கரு­தினால் 

துற­வி­க­ளதும் அர­சி­யல்­வா­தி­க­ளதும் நிகழ்ச்சி நிர­லுக்கு அடி­ப­ணிந்­து­வி­டாது சிவில் சமூக தலை­வர்கள் பேசி சிறந்த முடி­வுக்கு வர­மு­டியும். மறு­புறம் கல்­முனை விட­யத்­ துக்கு தீர்வு ஒன்றைப் பெற்­றுக்­கொ­டுக்க பல்­வேறு எத்­த­னிப்­புக்கள் 

எடுக்­கப்­ப­டு­கின்ற இந்த சந்­தர்ப்­பத்தில் முப்­பது வரு­டங்­க­ளாக உள்­ளூராட்­சி­மன்ற கோரிக்­கையை முன்­னி­றுத்தி போரா­டி­வரும் சாய்ந்­த­ம­ருது மக்­களின் கோரிக்­கையும் கிடப்பில் போடப்­பட்­டுள்­ளது. 

இந்த மக்­க­ளது பிரச்­சி­னையை தீர்ப்பதற்கும் பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவற்றுக்கும் என்ன நடந்தது என்று புரியவில்லை. அந்த மக்களின் கோரிக்கையும் சமாந்தரமாக தீர்க்கப்பட வேண்டும்.




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு