5 ரூபாய் மாடு..50 ரூபாய் வைக்கோல் தின்ற கதை..!
வலி தெற்கு பிரதேச சபையின் பவுசா் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 3500 ரூபாய் பணமே சபைக்கு வருமானமாக கிடைத்துள்ள நிலையில் 35 ஆயிரம் ரூபா பணத்தில் பவுசருக்கு டீசல் நிரப்பபட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
பிரதேச சபையில் பணியாற்றும் சுகாதார அதிகாரி ஒருவரே சபையில் குறித்த மோசடிகளுக்கு துணைபோவதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. எந்த ஒரு பிரதேச சபைக்கும் இல்லாதவகையில் வலி தெற்கு பிரதேச சபைக்கு என
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட விசேட காடர் மூலம் நியமிக்கப்பட்ட சுகாதார அதிகாரி ஒருவர் குறித்த சபையில் உள்ளபோதும் சபையின் செயற்பாடுகள்
வினைத்திறனற்றதாகக்க காணப்படுவதாகவும் பல்வேறு ஊழல் மோசடிகளுக்கு அது வழி வகுப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளர். இது தொடர்பில் நேற்று நடைபெற்ற சபை அமர்விலும் உறுப்பினர்களால் கேள்வி எழுப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது.