பீடி இலைகள் கடத்தலுக்காக பிரதான இடமாக மாறும் மன்னாா்..! இதுவரை 16500 கிலோ பீடி இலைகள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
பீடி இலைகள் கடத்தலுக்காக பிரதான இடமாக மாறும் மன்னாா்..! இதுவரை 16500 கிலோ பீடி இலைகள் மீட்பு..

மன்னாா்- நடுக்குடா கடற்பகுதியில் கடற்படையினா் நடாத்திய சோதனை நடவடிக்கையின்போது சுமாா் 939.2 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது. 

வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் நேற்று மலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது

45 பொதிகளை கொண்ட பீடி இலைகளை இவ்வாறு கண்டு பிடித்துள்ளனர். மீட்கப்பட்ட பீடி இலைகளைக்கொண்ட பொதிகள் நாடுக்குடா கடற்கரை பகுதியில் 

கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கான 

யாழ்ப்பாணம் சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் இது வரை 16 ஆயிரத்து 500 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு