இந்திய விமானங்கள் பாகிஸ்தானில் பறக்க தடை நீட்டிப்பு!
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதற்கான தடையை இம்ரான்கான் அரசு இம்மாத இறுதிவரை நீடித்துள்ளது. காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த பிப்ரவரி 26 ம் தேதி பாகிஸ்தான் வான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாதிகளின் முகாம்கள் மீது குண்டுவீசி தாக்கி அழித்தன.
இதையடுத்து இந்திய பயணிகள் விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் பறக்க அந்நாடு தடைவிதித்துள்ளது. இதற்கிடையே இந்த தடையை இந்த மாதம் 30 ம் தேதிவரை நீட்டிக்க பாகிஸ்தான் ராணுவம் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.