SuperTopAds

விஜய் மல்லயா, நீரவ்மோடியை இந்தியா அழைத்து வர நடவடிக்கை!

ஆசிரியர் - Admin
விஜய் மல்லயா, நீரவ்மோடியை இந்தியா அழைத்து வர நடவடிக்கை!

இந்தியாவால் தேடப்பட்டு வந்த பொருளாதார குற்றவாளிகள் விஜய் மல்லய்யா மற்றும் நீரவ் மோடி ஆகியோரை இந்தியா அழைத்து வர உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழிலதிபர் மல்லய்யா இங்கிலாந்தில் ஜாமீன் பெற்று வழக்குகளை சந்தித்து வருகிறார். 

நீரவ் மோடிக்கு கடன் மோசடி வழக்கில் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்து விட்டதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருவரையும் இந்தியா அழைத்து வந்து விசாரணை நடத்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் லண்டனில் முகாமிட்டுள்ளனர்.

விஜய் மல்லயா, நீரவ்மோடி ஆகியோரை அழைத்து வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த வெளியுறவு அமைச்சகம், அதுபற்றிய விவரங்களை வெளியிட முடியாது என்று தெரிவித்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விவரங்களை வெளியிட்டால் அது வழக்கின் விசாரணையை பாதிக்கக் கூடும் என்று அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.