'ஆன்’ ஆகாத ஆத்திரத்தில் புது செல்போனை ஷோரூம் வாசலில் எரித்த நபர்..!

ஆசிரியர் - Admin
'ஆன்’ ஆகாத ஆத்திரத்தில் புது செல்போனை ஷோரூம் வாசலில் எரித்த நபர்..!

புதிதாக வாங்கிய ஸ்மார்ட்போன் ‘ஆன்’ ஆகாத ஆத்திரத்தில், வாங்கிய ஷோரூம் முன்பே வாடிக்கையாளர் அதை தீவைத்து எரித்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு; சென்னையை அடுத்த தாம்பரம் அருகேயுள்ள கடப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் தலைமலை. இவருடைய மகன் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த தலைமலை, தனது மகனுக்கு ஒரு ஸ்மார்ட்போன் வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார்.

அதன்படி, சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரபல செல்போன் ஷோரூமில் 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கியுள்ளார். சில நாட்களுக்குப் பின்னர், அந்த போனில் சிம்கார்டு போட்டபோது அது ‘ஆன்’ ஆகவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தலைமலை, உடனே செல்போன் வாங்கிய ஷோரூம் சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் இதுபற்றி புகார் தெரிவித்துள்ளார்.

அப்போது ஷோரூம் ஊழியர்கள், ‘நாங்கள் கொடுக்கும்போது செல்போன் நன்றாகத்தான் இருந்தது. நீங்கள், சர்வீஸ் சென்டருக்கு சென்று போனைக் கொடுத்து சரிசெய்யுங்கள்’ என்று கூறியுள்ளனர். ஆனால், ‘இதற்கு பதிலாக வேறு போன்தான் வேண்டும்’ என அவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார் தலைமலை. ‘அப்படியெல்லாம் மாற்றித்தர முடியாது’ என ஷோரூம் ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த தலைமலை, தான் வாங்கிய ஸ்மார்ட்போன் மற்றும் அதற்கான பில் ஆகியவற்றை அந்த கடையின் முன்பே போட்டு அதன்மீது பெட்ரொல் ஊற்றி தீ வைத்தார். செல்போன் மற்றும் பில் தீயில் கொளுந்துவிட்டு எரிந்து சாம்பலானது. இதனால், அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Radio
×