SuperTopAds

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை! எதிர்மனு தள்ளுபடி!

ஆசிரியர் - Admin
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை! எதிர்மனு தள்ளுபடி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவைப் பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.

முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேரும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் அதன் மீது ஆளுநர் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பில் இந்த 7 பேரின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பாஸ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மீது இன்று விசாரணை நடந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில் 7 பேரை விடுவிக்கும் முடிவு ஆளுநர் முன்பு இருப்பதால் எங்களால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுப்பார் என்று கூறி குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.