வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்ட விவகாரம்- சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க முக ஸ்டாலின் வலியுறுத்தல்
கோவையில் இருந்து 50 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று இரவு தேனி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட விவகாரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களையும், மையங்களையும் பாதுகாக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க கோரி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதிகாரிகளின் செயல்பாடு ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையிழந்து விட்டனர்.
சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்கு தலைமைத் தேர்தல் அதிகாரி தடுமாறுகிறார். வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பதில் தமிழகத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நிகழ்கின்றன என்று கூறியுள்ளார்.