"மோடியை திருடன் என உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது" - ராகுல் பேட்டி!

ஆசிரியர் - Admin

பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் விதத்தில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒரு வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி வரும் ராகுல்காந்தி, நாட்டின் காவலாளியான பிரதமர் ஒரு திருடர் என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்று கருத்து பதிவிட்டிருந்தார். இதையடுத்து ராகுல்காந்திக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், பாஜகவை சேர்ந்த மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

அதில் ரபேல் ஒப்பந்தம் குறித்த வழக்கில் பிரதமர் குறித்து உச்சநீதிமன்றம் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை தவறாக ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். அந்த வழக்கில் அடுத்த வாரம் திங்கட்கிழமைக்குள் ராகுல்காந்தி பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Radio
×