இணையதள மோசடி - ருபாய் 2.5 லட்சத்தை இழந்த தொழிலதிபர்!

ஆசிரியர் - Admin
இணையதள மோசடி - ருபாய் 2.5 லட்சத்தை இழந்த தொழிலதிபர்!

ஆன்லைனில் குறைந்த விலைக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க எண்ணிய டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இரண்டரை லட்சம் ரூபாயை பறிகொடுத்துள்ளார். 

ஆன்லைனில் வந்த விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொண்ட அந்த தொழிலதிபருக்கு, செல்போனில் ஒரு குருந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் உள்ள லிங்கை தொட்ட அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்குகளில் இருந்து இரண்டரை லட்சம் ரூபாய் திருடப்பட்டது.

இது தொடர்பாக அவர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் விசாரணை நடத்தப்படுகிறது. குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பனை என்று ஆன்லைனில் விளம்பரம் வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள காவல்துறையினர், ஏதேனும் லிங்க் அனுப்பப்பட்டால் அதனை தொட வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கின்றனர்.

Radio
×