ஓட்டு இயந்திரத்தில் சின்னம் தெளிவாக இல்லை - நாம் தமிழர் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

ஆசிரியர் - Admin
ஓட்டு இயந்திரத்தில் சின்னம் தெளிவாக இல்லை - நாம் தமிழர் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

வாக்குப் பதியும் இயந்திரத்தில் நாம் தமிழரீ கட்சியின் சின்னம் தெளிவாக இல்லை என்று கூறி நாம் தமிழர் கட்சி உசீசநீதிமன்றில் தொடரப்பட்டது. அந்த வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றமீ மறுத்து விட்டது. 

இந்தியாவில் நடைபொறவுள்ள பாராளுயனீறதீ தேர்தலிலும் தமிழகத்தில் நடைபெவுள்ள சட்டசபை இடைத்தேர்தலிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. 

அந்த கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவை அச்சிடப்பட்ட கடதாசி ஓட்டுவது வழக்கம். அப்படி ஓட்டப்பட்ட நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னம் தெளிவாக இல்லை என்று அந்த கட்சி புகார் தெரிவித்தது. 

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு எந்த பலனும் இல்லாத சூழலில் அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என கூறியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு