உலக மக்களின் மனச்சாட்சியை உலுக்கிய பாிசுத்த பாப்பரசா்..!

ஆசிரியர் - Editor I
உலக மக்களின் மனச்சாட்சியை உலுக்கிய பாிசுத்த பாப்பரசா்..!

தென்சூடான் நாட்டுக்கு விஜயம் செய்துள்ள பாிசுத்த பாப்பரசா் திருத்தந்தை பிரான்சிஸ் அந்த நாட்டின் அதிபா் மற்றும் எதிரடிணியினரை சந்தித்து சந்தித்து உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவருமாறு கேட்டுள்ளாா். அதனோடு அவா் செய்த ஒரு காாியம் உலக மக்களின் மனச்சாட்சியை உலுக்கியுள்ளது. 

சமாதானத்தை ஏற்படுத்தும் முகமாக அதனை அவர்களுக்கு கற்பிக்கும் முகமாக அனைவருக்கும் முன்மாதிரியாக தென் சூடானின் அரசியல் தலைவர்கள் அனைவரது காலிலும் விழுந்து அவரது பாதத்தினை முத்தமிட்டுள்ளார்.

கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை நினைவுகூறும் இந்நாட்களில் பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளாரின் இந்தச் செயற்பாடு உலகத்தில் உண்மையான நடமாடும் இயேசுக் கிறிஸ்துவை கண்முன்னே காட்டிநிற்கின்து.எம் உறவுகளை ஏற்க மறுக்கும் இன்றைய உலகில் திருத்தந்தையின் இந்த செயற்பாடு 

இதை விட கீழ்படிவு இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை என்பதை எமக்கு எடுத்துரைக்கின்றது.யார் துணிவார் இதைச் செய்ய? தன்னை விட வயதில் தாழ்ந்தவரிடம் மரியாதைக்கொடுத்து பேச நாம் இன்று முற்படுகின்றோமா? 

அல்லது சாதி, மதம், இனம் மதம் பாராமல்தான் வாழ்கின்றோமா என நம்மையே நாம் கேள்விக் கேட்க வேண்டிய தருணம் இது.கிறிஸ்தவர்களின் திருவருட்சாதனங்களில் ஒன்றான ஒப்புரவு(பாவமன்னிப்பு) இன்று பலரது வாழ்வியலில் வெறும் சம்பிரதாயமாக கடமையாக மாத்திரமே இருக்கின்றது. 

அதனை ஆத்மார்த்தமாக உணர்ந்து செயற்படுவோர் நம்மில் எத்தனைப் பேர்.அதனை விட இன்று யாரிடத்தில் மனிதம் குடிகொண்டிருக்கின்றது, தம்மை தாமே கொன்று புசிக்கும் கொடூரத்தை அடைந்துகொண்டிருக்கும் மனித இனத்தில் இப்படி ஒரு மனிதம் பல மதகுருமார்களுக்கு பல நாட்டின் தலைவர்களுக்கு 

என அனைவருக்குமே எடுத்துக்காட்டு.இதே போன்றதான ஒரு சூழல் கடந்த 2017ஆம் வருடம் இலங்கையிலும் அரங்கேறியது. தனது உயிரைக்காப்பாற்றிய மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்தினரின் காலில் விழுந்து மன்னிப்புக்கோரிய மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் செயலும் இதேபோன்றதே.

பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுடன் நீதிபதி இளஞ்செழியனை ஒப்பிடுவதா, அது சரியா தவறா என்பது தொடர்பான விமர்சனம் இங்கு எழக்கூடும்.ஒப்பீடு என்பதைத் தாண்டி நாம் இங்கு காண வேண்டியது மனிதம் ஒன்று மாத்திரமே. இதையே கிறிஸ்தவ திருச்சபையும் எமக்கு கூறுகின்றது.

இன, மத, குல பேதங்களைத் தாண்டி மனிதத்துவம் என்பது அதி முக்கியத்துவம் வாய்ந்தது, இந்த பூவுலகில் மனிதத்துவத்துடன் மனிதர்கள் வாழ்வது கடினம் இவர்களைப் போன்ற இளஞ்செழியன்களும் போற்றப்பட வேண்டியவர்களே.

இவர்கள் அனைத்திலும் அதி முக்கியத்தரான பாப்பரசர் பிரான்சிஸ் காலாகாலத்திற்கும் நெஞ்சில் குடியிருக்கும் தெய்வங்களைப் போன்றவர்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு