SuperTopAds

இந்திய இராணுவத்திற்கு அஞ்சியே இலங்கை இராணுவத்தை பலப்படுத்துகிறாா்கள்.. நாடாளுமன்றில் அதிா்ச்சி தகவலை வெளியிட்ட சிவசக்தி ஆனந்தன்..

ஆசிரியர் - Editor I
இந்திய இராணுவத்திற்கு அஞ்சியே இலங்கை இராணுவத்தை பலப்படுத்துகிறாா்கள்.. நாடாளுமன்றில் அதிா்ச்சி தகவலை வெளியிட்ட சிவசக்தி ஆனந்தன்..

இந்தியாவுக்கு அஞ்சியா இலங்கை இராணுவத்தை பலப்படுத்துகிறீா்கள்? என நாடாளுமன்ற உறுப்பினா் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியிருக்கின்றாா். 

பாதுகாப்பு, மகாவலி மற்றும் சுற்றுசூழல் அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. 

இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.யுத்தம் இல்லாத நிலையில் எதற்கு பாதுகாப்பு அமைச்சிற்கு மேலதிக நிதி எனவும் அவர் இதன்போது நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், இந்த சிறிய நாட்டில் இராணுவத்தை பலப்படுத்தப்படுவதன் நோக்கம் என்ன? யாருக்கு எதிராகப் போரிட இராணுவம் பலப்படுத்தப்படுகின்றது? என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.அண்மையில் அரசியல் ஆய்வாளர் ஒருவரின் கட்டுரை ஒன்றை வாசித்தேன். 

அதில் இந்தியாவிற்கு அஞ்சியே பாதுகாப்பு அமைச்சிற்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இராணுவம் பலப்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

எனவே இவ்வாறு இந்தியாவிற்கு அஞ்சியா இராணுவம் பலப்படுத்தப்படுகின்றது என கேட்க விரும்புகின்றேன்.

யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப ஒதுக்கவேண்டிய நிதி, இராணுவத்தினருக்கு ஒதுக்குவதன் மூலம் நாடு அதல பாதாளத்திற்கு செல்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வரவு செலவுத்திட்டதில் ஏதும் நன்மைகள் இருக்கின்றதா என கேட்டால் எதுவும் இல்லை எனவும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.