SuperTopAds

400க்கும் மேற்பட்ட இந்தியர்களை விடுதலை செய்ய பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்!

ஆசிரியர் - Admin
400க்கும் மேற்பட்ட இந்தியர்களை விடுதலை செய்ய பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்!

தண்டனைக் காலம் முடிந்த பிறகும் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 10 கைதிகள், 385 மீனவர்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக 2016 ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூசன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் அவரை இந்திய சட்டக்குழுவினர் சந்திக்க பாகிஸ்தான் அனுமதி மறுத்து வருகிறது. அவரை சந்திக்க அனுமதிக்கும்படியும் பாகிஸ்தானுக்கு மீண்டும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.