SuperTopAds

கிழக்கில் நாளை கதவடைப்பு - நீதிக்கான மாபெரும் மக்கள் பேரணி!

ஆசிரியர் - Admin
கிழக்கில் நாளை கதவடைப்பு - நீதிக்கான மாபெரும் மக்கள் பேரணி!

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி, கிழக்கில் நாளை கதவடைப்புப் போராட்டமும், நீதிக்கான மாபெரும் மக்கள் பேரணியும் இடம்பெறவுள்ளது. 

இதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து, மட்டக்களப்பு மாவட்டமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் அமைப்பின் பேரில், இந்தச் சுவரொட்டிகள் உரிமை கோரப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு - கல்லடிப் பாலத்திலிருந்து நாளை காலை 10 மணிக்கு பேரணி ஆரம்பமாகும் . “கால அவகாசம் வேண்டாம்; சர்வதேச விசாரணை வேண்டும்”, “விடயத்தை, ஐ.நா பொதுச் சபைக்குப் பாரப்படுத்த வேண்டும்”, “காணாமல் போனோருக்கான அலுவலகம் வேண்டாம்” ஆகிய கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, இப்போராட்டம் நடைபெறவுள்ளது.