SuperTopAds

தமிழ் மக்­க­ளுக்­கு மகிந்த தரப் போகும் தீர்வு என்ன?- வெளிப்படுத்தக் கோருகிறார் சிவிகே

ஆசிரியர் - Admin
தமிழ் மக்­க­ளுக்­கு மகிந்த தரப் போகும் தீர்வு என்ன?- வெளிப்படுத்தக் கோருகிறார் சிவிகே

தமிழ் மக்­க­ளுக்­குத் தீர்வு வழங்­கு­வேன் என்று கொக்­க­ரித்­துக் கொண்­டி­ருக்­கும் முன்­னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ­பக்ச, தான் வழங்கப் போகும் தீர்வு என்ன என்­ப­தைத் தெளி­வா­கக் கூற­வேண்­டும். தாம் வழங்க கூடிய தீர்­வுத் திட்­டம் என்ன என்­பதை அவர் அப்­போ­தும் கூற­வில்லை. இப்­போ­தும் தெளி­வா­கக் கூற­வில்லை என்று வட­மா­காண சபையின் அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தெரி­வித்­தார் .

அர­சி­யல் தீர்­வுத் திட்­டத்­தைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பே குழப்­பி­யது என மகிந்த ராஜ­பக்ச வெளி­யிட்­டுள்ள கருத்­துத் தொடர்­பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

மகிந்த கூட்­ட­மைப்­புத்­தான் தீர்­வுத் திட்­டத்­தைக் குழப்­பி­யது என்று கூறு­வது அர­சி­யல் சந்­தர்ப்­ப­வா­தக் கருத்­தா­கும். ஏனெ­னில் மகிந்­த­வு­டன் கூட்­ட­மைப்­புக் குறைந்­தது 18 தட­வை­கள் தீர்வு விட­யம் தொடர்­பாக பேச்­சுக்­களை நடத்­தி­யது. அதில் சுமூ­க­மான தீர்வு வழங்க மகிந்த முன்­வ­ர­வில்லை. இலங்­கை­யில் உள்­நாட்­டுப் போர் மௌனிக்­கப்­பட்ட பின்­னர் மிக­வும் அற்­பு­த­மான வாய்ப்­புக்­கள் இருந்­தன. அன்­றைய காலத்­தில் மகிந்­த­வுக்கு அதி­கா­ர­மும் பல­மும் சாத­க­மாக இருந்­தது. அதனை பயன்­ப­டுத்­தா­மல் 13 பிளஸ் என்று கூறிக் கொண்­டி­ருந்­த­வர் தற்­போது 13 மைன­ஸில் பேசிக் கொண்­டி­ருக்­கி­றார்.

அர­சி­யல் தீர்வு தொடர்­பில் மகிந்­த­வின் நிலைப்­பாடு இப்­ப­டித்­தான் உள்­ளது. இவ்­வா­றான நிலை­யில் தீர்வு கிடைக்­கா ­மைக்கு கூட்­ட­மை ப்­புத்­தான் முழுப் பொறு ப்பு என்று கூறு­வது பொருத்­த­மற்­றது. அவ­ரால் வழங்­கக்­கூ­டிய தீர்வு என்ன என்­பதை தெளி­வாக அதி­கா­ரத்­தில் இருந்­த­ போ­தும் கூற­வில்லை தற்­போ­தும் கூற­வில்லை. தற்­போ­து­கூட தெளி­வா­கக் கூறு­வா­ரா­ யின் அத­னைக் கூட்­ட­மைப்பு பரி­சீ­லிக்­கும் என்­றார்.