தமிழ்தேசிய கூட்டமைப்பு அமைச்சு பதவியை விரும்பியிருந்தால் அது எப்போதோ கிடைத்திருக்கும்..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்பு அமைச்சு பதவியை விரும்பியிருந்தால் அது எப்போதோ கிடைத்திருக்கும்..

தமிழர்களுக்கான தீர்வுதான் முக்கியம் என்ற ஒரே நோக்கத்திற்காகவே எங்களுடைய தலைவர் கள் அமைச்சுப் பதவிக்காக அலையவில்லை. எனினும் தற்போது எங்களுடைய தலைவர்களின் கால்களில் மண்டியிட்டுத்தான் அரசாங்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாதிப்புக்களை ஈடுசெய்யவேண்டிய பொறுப்பு மாவட் டத்திலுள்ள மாணவர்களுக்குமுள்ளதெனவும், முல்லைத்தீவு மாவட்டத்தில்அதிகரித்துள்ள நில அபகரிப்புக்களால் மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் வாழ்வாதாரம் முடக்கப்படுவதாகவு ம், 'கம்ப ரெ லி யா' திட்டத்தை 'கிராம எழுச்சித்திட்டம் 'என 

தமிழில் பதியப்படவேண்டுமெனவும் தமிழ் பாடசாலைகளின் விழாக்களுக்கு தமிழ் பிரதிநிதிகளையும், அந்தந்த பாடசாலையில் கற்றுயர்ந்தவர்களையும் விருந்தினராக அழைக்கும்படியும் ரவிகரன் மிகவும் காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டிகள் 06.02.2019 அன்று பாடசாலை முதல்வர் க.யோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எங்களுடைய மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமாகும். இவ்வாறு பாதிக்கப்பட்ட மாவட்டத்தின், பாதிப்புக்களை ஈடுசெய்யவேண்டிய பெறுப்பு மாவட்டத்திலுள்ள மாணவச் செல்வங்களிடமே இருக்கின்றது. எனவே நிச்சயமாக மாணவர்களாகிய நீங்கள் கல்வியிலே உயர்ந்து, 

நல்ல ஒழுக்க சீலர்களாகவும் வளர்ந்து உங்களுடைய வீட்டிற்கும், கிராமத்திற்கும், பிரதேசத்திற்கும், மாவட்டத்திற்கும், மாகாணத்திற்கும் பெருமை சேர்ப்பதுடன். தேசிய மட்டத்தில் கூட முல்லைத்தீவு மாணவர்கள் சாதனையாளர்கள் என்ற முத்திரையைப் பதிக்கவேண்டும்.

ஒன்பது வருடங்களைக் கடந்துடவிட்டது எங்களுடைய மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டு, ஆனால் வன இலாகாவினுடைய தொல்லைகள் எல்லை மீறிப்போய்க்கொண்டிருக்கின்ற நிலமை எங்களுடைய மாவட்டத்தில்தான் மிகவும் அதிகம்.

அந்தவகையிலே ஒரு தடவை மணவாளன்பட்ட முறிப்பிலே பல ஏக்கர் காணிகளுக்கு வன இலாகாவினர் எல்லைக் கற்கள் நாட்டிக்கொண்டிருந்த சமயம், அப்பகுதி மக்களின் அறிவித்தலோடு நான் நேரடியாக வந்து அந்த எல்லைக் கற்களைப் பிடுங்கி எறிந்து சுமார் 750ஏக்கருக்கு மேற்பட்ட மக்களின் காணிகளை அன்று விடுவிக்க முடிந்தது.

இன்று நாங்கள் கேப்பாப்புலவு மண் மீட்பிற்காகவும், கோத்தபாய கடற்படை முகாம் மண் மீட்பிற்காகவும் ஏனைய எமதுமண்மீட்புகளுக்காகவும் வீதியிலிருந்து பல நாட்களாக மக்கள் போராடுகின்றாா்கள். 

ஆனால் அன்று ஒரே நாளில் குறிப்பிட்ட நேரத்திற்குள் அதே ஆவேசத்துடன் குறிப்பிட் சில மக்களுடன் மணவாளன் பட்ட முறிப்பிலே அந்த மக்களின் காணிகளை எல்லைக் கற்களைப் பிடுங்கி எறிந்து அந்தக் காணிகளை விடுவித்தோம்.

எங்களுடைய காணிகளில் எல்லை மீறி நுழைவது மாத்திரமல்லாது, தங்களுடைய அட்டகாசங்களைக் காண்பித்துக்கொண்டிருக்கும் இந்த நிலமைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதென்ற ஒரு ஆவேசத்துடன்தான் அன்று அந்தச் சம்பவம் நடைபெற்றது.

எங்களுடைய பல ஏக்கர் காணிகளுக்கு எல்லைக் கற்களை நாட்டி அபகரித்துக் கொண்டிருக்கும் நிலமைகளை மாற்றியமைக்கும்சூழலை சம்பந்தப்பட்ட அரசாங்கத்தினுடைய உயர் அதிகாரிகள், அல்லது உயர் தலைவர்கள் உருவாக்கவேண்டும். எங்களுடைய காணிகள் எங்களுடைய மக்களுக்குத் தேவை என்பதனை உணரவேண்டும்.

இது தவிர முல்லைத்தீவு மாவட்டத்திலே ஒட்டுசுட்டானில் மிக அதிகமான குளங்கள், அம்பகாமம் பகுதியிலே 07 குளங்களை உள்ளடக்கி விமானப்படை முகாமினை 8000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட காணிகளில் அமைத்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் பிரமனாலங் குளத்தினை மூடி இராணுவ முகாம் அமைத்து வைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

மேலும் குளங்களோடு சேர்ந்த விவசாய நிலங்கள்அபகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த விவசாயிகள் எங்கு செல்வது தமது வாழ்வாதரத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக என கேட்கின்றேன்.

இவ்வாறு எமது மக்களுடைய வாழ்வாதாரத்தினை முடக்கிவிட்டு, இங்கே நிதி ஒதுக்கீடுகளின் ஊடாக குறைந்தளவு நிதிகளைத் தந்து எங்களை ஏமாற்றுகின்றனர்.

எங்களுடையநிலங்கள் இருக்குமாக இருந்தால், எங்களுடைய குளங்கள் இருக்குமாக இருந்தால் எங்களுடைய குளங்களிலும், நிலங்களிலும் எங்களுடையவர்கள் அவற்றின் வருமானத்திலேயே கோடிக்கணக்கில் ஒதுக்கி எமது பாடசாலைகளை முன்னேற்றியிருப்பார்கள் என்பதனைச் சுட்டிக்காட்டுகின்றேன்.

இலங்கை நாட்டினுடைய பிரஜைகள் நாங்கள் என்று சொல்லிக்கொண்டுடிருக்கின்றார்கள்.

அப்படியெனில் அரசாங்கம் செய்யவேண்டிய கடமை இன்னும் அதிகமாக இருக்கின்றது.

எங்களுடைய தேவைகள் என்ன, அழிக்கப்பட்டவை என்ன, பாடசாலைகளுடைய கட்டுமானங்களைப் பூா்த்திசெய்யவேண்டிய பொறுப்பு யாருடையது, இலங்கையினுடைய தேசிய கீதத்தில் ஈழ சிரோன்மணி என்று கூறப்படுகின்றது 

ஈழம் என்று அன்றே சொல்லிவிட்டார்கள் அந்த ஈழம் தனியாக இங்கே இருக்கின்றதா. இல்லையெனில் அரசாங்கம் எங்களுடைய தேவைகளை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு அவர்களிடம் உண்டு.

இரண்டு இலட்சம், பத்து இலட்சம் தந்து எங்களுக்கு இங்கே பூச்சாண்டி காட்டத்தேவையில்லை.

தற்போது கம்பரெலியா என்ற திட்டத்தில், நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன. ஏன்அத்திட்டத்தை தமிழில் கிராம எழுச்சித் திட்டம் எனக் கூறமுடியும்தானே. நாம் தமிழர்கள் தானே. எனவே அரசு இன்றுவரையும் கம்பரெலியாஎன்ற பெயர் போன்றுதான் அனைத்தையும் மாற்றிக்கொண்டு இருக்கும் நிலையில் இருக்கிறது.

அரசு கம்பரெலியா என்று நடைமுறைப்படுத்துமெனில், அவர்கள் சிங்களநாடு என்று சொல்லும் அந்த நிலையோடுதான் இன்றும் இருக்கிறார்கள் எனத் தோன்றுகின்றது.

சர்வதேச ரீதியாக ஜெனீவாவிற்குக் கொண்டுசெல்லப்பட்டு, ஏதோ ஒரு வகையிலே எங்களுக்கான தீர்வுத்திட்டம் கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்த நிலையிலே இப்படியான பெயர்களால்கூட எங்களுடைய தமிழை ஒதுக்கவேண்டாம் எனக் கூறிக்கொள்கின்றேன்.

அத்திட்டத்தை கிராம எழுச்சித் திட்டம் எனத் தமிழில் பதிவுசெய்து நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

எங்களுடைய பாடசாலைகளில் நடைபெறும் விழாக்களுக்குத் தமிழ் தலைவர்களை அழையுங்கள். அந்த பாடசாலையில் கல்விகற்று வெளியேறிய பழைய மாணவர்களாக இருக்கும், வைத்தியர்கள், உயர் இடத்தில் இருப்பவர்கள், பிரதேசசபை உறுப்பினர்களை அழையுங்கள்.

சிங்களமற்றும் முஸ்லீம் பாடசாலைகளில், அங்கு எமது தமிழ்த் தலைவர்களை விழாக்களில் முதன்மை விருந்தினராக அழைப்பார்களா என கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

அமைச்சுப் பதவிகளை எடுப்பதாக இருந்தால் எப்போதே எங்களுடைய தலைவர்கள், பல பதவிகளை வாங்கியிருக்க முடியும். ஆனால் எங்களுடைய தீர்வுத் திட்டம் என்பது மிக முக்கியமானது. தீர்வுத்திட்டத்தின்பால் எங்களுடையவர்கள் இருக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான் அவர்கள் அரசாங்கத்திடம் பதவிகளுக்கு அலையவில்லை

ஆனால் எங்களுடையவர்களின் கால்களில் மண்டியிடடுத்தான் இன்றைய அரசாங்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். என்றார்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு