SuperTopAds

அரசியல் வரலாற்றில் பிரதமராக அலரி மாளிகை செல்லாமலே பதவி விலகும் மஹிந்த!

ஆசிரியர் - Admin
அரசியல் வரலாற்றில் பிரதமராக அலரி மாளிகை செல்லாமலே பதவி விலகும் மஹிந்த!

அரசியல் வரலாற்றில் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் நாடாளுமன்றத்திற்கும் அலரி மாளிகைக்கும் செல்லாமல் பதவி விலகவுள்ள ஒரே தற்காலிக பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ காணப்படுகின்றார்.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கு நிச்சயம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க வேண்டும். ஆனால் அது நீதியான முறையில் இடம்பெற வேண்டும்.

இரகசியமாக நாடாளுமன்ற உறுப்பினரை பிரதமராக தெரிவுசெய்து அவரின் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தினை முன்னெடுத்து செல்லும் வேளையில் திருட்டுத்தனமாக வர்த்தமானியினை தேர்தலுக்கு வெளியிட்டு நாடாளுமன்ற தேர்தலினை நடத்துவதற்கு ஒருபோதும் மக்கள் விடுதலை முன்னயிணினர் ஆதரவு வழங்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.