ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவளிக்க மாட்டேன்..

ஆசிரியர் - Editor
ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவளிக்க மாட்டேன்..
ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இதை மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஜனாதிபதிக்கு எதிரான எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்காது. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குள் மேலும் தீ மூட்ட தயாராக இல்லை” என பதிவிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்காக அரசியல் குற்றவியல் பிரேரணை ஒன்றை கொண்டுவர ஐக்கிய தேசிய கட்சியினர் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio
×