SuperTopAds

மலைய மக்களுக்கு ஆதரவாக கோப்பாய் கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவர்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
மலைய மக்களுக்கு ஆதரவாக கோப்பாய் கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவர்கள் போராட்டம்..

மலையகத் தோட்ட தொழிலாளர்கள் ஆயிரம்ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளன ர்.

இதற்கமைய கலாசாலையில் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

மலையகத் தோட்ட தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பளம் கோரி தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்திற்கு நாட்டின் பல இடங்களிலிருந்து பல்வேறு தரப்பினர்களும் ஆதரவுகளைம் தெரிவித்துபோராட்டங்களிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

இவ்வாறானதொரு நிலையிலேயே ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவர்களும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இன்றைதினம் போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.