5000 பொலிசார் குவிக்கப்பட்டு கொழும்பில் பாதுகாப்பு! - கூட்டு எதிரணியின் வியூகத்தை உடைக்க திட்டம்
கொழும்பில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் இன்று நடத்தவுள்ள ஜன பலய பேரணியை முன்னிட்டு போராட்டத்தை முன்னிட்டு கொழும்பல் 5000 பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக் கணக்கான பொலிசார் வரவழைக்கப்பட்டு கொழும்பு நகரின் பல இடங்களில் பாதுகாப்புப் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இலட்சக் கணக்கான மக்களை அழைத்து வந்து கொழும்பு நகரை முடக்கப் போவதாக கூட்டு எதிரணியினர் சூளுரைத்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளும் நிலையில், கூட்டு எதிரணியினர் வன்முறைகளை தூண்டிவிடலாம் என்று புலனாய்வுத்துறையினர் அரசாங்கத்திற்கும், பொலிசார் உட்பட பாதுகாப்பு தரப்பினருக்கும் எச்சரிக்கை விடுத்திருப்பதை அடுத்தே பாதுகாப்பிற்காக பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
குறிப்பாக கொழும்புப் பல்கலைக்கழக சந்தி, கொள்ளுப்பிட்டி சந்தி, லிப்டன் சுற்றுவடடம், விகாரமாதேவி பூங்கா, கொழும்பு கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் ஏராளமானன பொலிசார் குவிக்கப்பட்டு நேற்று மாலை முதல் பாதுக்காப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆங்காங்கே கலகத் தடுப்புப் பொலிசாரும், தண்ணீர் பீரங்கி வாகனங்களுடன் நிறுத்தப்பட்டு உள்ளனர்.