SuperTopAds

முதல்முறையாக ஈரல் மாற்று சத்திரசிகிச்சை! - கண்டி வைத்தியசாலை மருத்துவர்கள் சாதனை

ஆசிரியர் - Admin
முதல்முறையாக ஈரல் மாற்று சத்திரசிகிச்சை! - கண்டி வைத்தியசாலை மருத்துவர்கள் சாதனை

கண்டி பெரிய ஆஸ்பத்திரியில் முதன் முதலாக ஈரல் மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நான்கு சத்திர சிகிச்சை நிபுணர்கள், ஆறு விசேட நிபுணர்கள் உள்ளிட்ட வைத்திய குழுவினர், 12 மணித்தியால போராட்டத்தின் பின்னர் இதனை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

ஈரல் பாதிக்கப்பட்டு, கண்டி பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கண்டி பன்வில பிரதேசத்தை சேர்ந்த 64 வயது சரத் வீரகோன் என்பவருக்கு கடந்த வாரம் ஈரல் மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சத்திர சிகிச்சைக்கப் பின்னர் இவர் பூரண சுகமடைந்துள்ளதோடு அவர் வீடு செல்ல தயாராகவிருப்பதாக கண்டி வைத்தியசாலை பணிப்பாளர் ​டொக்டர் சமன் ரட்நாயக்க தெரிவித்தார்.

கண்டி பொலிஸ் நிலையத்தில் ஊர்காவற்படை வீரராக பணியாற்றுகையில் திடீர் பாதிப்பினால் மூளைச்சாவடைந்திருந்த நபரின் ஈரலே தானமாக வழங்கப்பட்டிருந்தது. அவரின் குடும்பத்தினரின் விருப்பத்துடனே இந்த ஈரல் மாற்று சிகிச்சை நடத்தப்பட்டது.

இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஈரல் மாற்று சத்திர சிகிச்சைகள் இடம் பெறுகின்றன. இதற்காக அதிக செலவு செய்யப்படும் நிலையில் ஒரு ரூபா கூட செலவின்றி இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு 10 இலட்சம் ரூபா அரசாங்கத்தினால் செலவிடப்பட்டுள்ளது. சிறுநீர் சத்திர சிகிச்கை நிபுணர் வைத்தியர் பீ.கே. ஹரீச்சந்திரவினது வரிகாட்டலில் வைத்திய ஆலோசகர் மற்றும் வைத்திய நிபுணர்களான சரித்த வீரசிங்கவினால் இந்த சத்திர சிகிச்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.