SuperTopAds

2024: தமிழ் சினிமாவுக்கு மிக மோசமான வருடம்!

ஆசிரியர் - Admin
2024: தமிழ் சினிமாவுக்கு மிக மோசமான வருடம்!

தமிழ் சினிமா ஒருகாலத்தில் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்ட ஹிட் படங்கள் கொடுத்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது தெலுங்கு படங்கள் பான் இந்தியா ஹிட் ஆகி வரும் நிலையில் தமிழில் அப்படி எதுவும் வரவில்லை என்கிற விமர்சனம் இருந்து வருகிறது. தற்போது 2024 வருடம் தமிழ் சினிமாவுக்கு மிக மோசமான வருடம் என்கிற தகவல் வெளியாகி இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

2024ல் வெளிவந்த 223 தமிழ் படங்கள் பிளாப் ஆகி இருக்கிறது. அதன் மூலமாக 1000 கோடி ரூபாய்க்கும் மேல் தமிழ் சினிமா துறைக்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.

சமீபத்தில் நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் பேசும்போது "1 கோடியில் இருந்து 4 கோடி ரூபாய் வரை படம் எடுக்க நினைப்பவர்கள் தயவு செய்து அந்த பணத்தை வங்கியில் பிக்ஸட் டெபாசிட்டில் போடுங்க. அந்த அளவுக்கு தமிழ் சினிமா மோசமான நிலையில் இருக்கிறது" என விஷால் பேசி இருந்தார்.