வைத்தியர் அர்ச்சுனாவின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு!

ஆசிரியர் - Editor I
வைத்தியர் அர்ச்சுனாவின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு!

வைத்தியர் இராமநாதன் அருச்சுனாவின் பிணை மனு மன்னார் நீதவான் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து காணொளிகளை பதிவு செய்தமை, கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியசாலை நிர்வாகம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தது. 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , வைத்தியரை மறுநாள் சனிக்கிழமை கைது செய்து வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்ட பின்னர் , நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை , வைத்தியரை எதிர்வரும் 07ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 

அந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வைத்தியர் அருச்சுனா சார்பில் சட்டத்தரணிகள் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஊடாக பிணை விண்ணப்பம் செய்யப்பட்டது. 

அதன் போது வைத்தியசாலை நிர்வாகம் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தமையை அடுத்து, பிணை விண்ணப்பத்தை மன்று நிராகரித்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு