pink நிற உடையில் தமன்னா.. சமூக வலைத்தளங்களில் வைரல்..
நடிகை தமன்னா தனது சமூக வளைத்தள பக்கத்தில் வசீகரிக்கும் அழகில் பதிவேற்றியுள்ள ரீசென்ட் போட்டோஷூட் இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தமன்னா. இதன் பின்னர் தமிழில் நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இன்று வரை இருந்து வருகின்றது.
சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் முன்னணி நாயகிகளின் பட்டியலில் இடம்பிடத்த தமன்னா தற்போது தமிழ் சினிமாவை காட்டிலும் பாலிவுட்டில் அதிக திரைப்படங்களில் கமிட் ஆகி வருகின்றார்.
இறுதியாக அவர் நடிப்பில் வெளிவந்த லஸ்ட் ஸ்டோரீஸில் படு கிளாமராக களமிறங்கியிருந்தார். ஜெயிலர் படத்தில் காவலா பாடலில் நடனம் ஆடிய பின்னர் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானார்.
திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும் சமூக வளைத்தளங்களிலும் ஆர்வமாக இருக்கும் இவர் அடிக்கடி கிளாமர் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவேற்றுவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது பிங்க் நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.