பதுளையில் மண்சரிவு அபாயம்; 120 குடும்பங்கள் வெளியேற்றம்!

ஆசிரியர் - Editor II
பதுளையில் மண்சரிவு அபாயம்; 120 குடும்பங்கள் வெளியேற்றம்!

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் வெலிமடை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட ஒஹிய, உடவேரிய, லைபோன் ஆகிய தோட்டங்களில் இருந்த தொழிலாளர்கள் குடும்பங்களை தங்களின் குடியிருப்புக்களில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அண்மையில் பெய்த கடும் மழையை அடுத்து, ஏற்பட்ட குறித்த அபாயம் காரணமாகவே மேற்படி தோட்டங்களில் வசித்த 120 குடும்பங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்கள் உடவேரிய தோட்டத்தில் கைவிடப்பட்ட தேயிலை தொழிற்சாலையொன்றில் தங்க வைக்கப்பட்ட போதிலும், அங்கு எவ்வித வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும், கடந்த ஒரு வார காலமாக குறித்த தேயிலைத் தொழிற்சாலையிலும் மேலும் சிலர் பாடசாலையிலும் மற்றும் தோட்ட ஊழியர் வீட்டிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தேயிலைத் தொழிற்சாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள போதிலும் தொழிற்சாலைக்குள்ளேயே கூடாரங்களை அமைத்து எவ்வித அடிப்படை வசதியுமற்ற நிலையில் வாழ வேண்டிய இக்கட்டான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.

இதேவேளை, இப்பகுதியைச் சேர்ந்த அரசியல் தலைமைகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து தம்மைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்பதோடு, அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு