யாழ்.அச்சுவேலி சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் இருந்து காசுக்காக சிறுவர்களை தப்பிக்க வைக்கும் காவலாளி..

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்சுவேலி சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் இருந்து காசுக்காக சிறுவர்களை தப்பிக்க வைக்கும் காவலாளி..

யாழ்.அச்சுவேலி - சிறுவர் நன்னடத்தை பாடசாலையிலிருந்து சிறுவர்களை தப்பிக்க வைப்பதற்கு காவலாளி பணம் வாங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

வெளி மாகாணங்களைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுச் சிறுவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நன்னடத்தைப் பாடசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளமை தொடர்பில் . அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அன்றைய தினமே வவுனியா பேருந்து நிலையத்தில் வைத்து வவுனியா பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் அச்சுவேலிக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டனர்.

அச்சுவேலிப் பொலிஸாரால் சிறுவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், நன்னடத்தைப் பாடசாலையின் காவலாளிக்கு தமது பெற்றோர் பணத்தை வைப்பிலிட்டதாகவும் அவரே தப்பிக்க உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 

அத்துடன் காவலாளி வெளியிலிருந்து சட்டவிரோதமாக பொருள்களைக் கொண்டு வந்து தருவார் என்றும் சிறுவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய காவலாளியை பாடசாலை நிர்வாகம் பணி இடைநிறுத்தியுள்ளது. 

ஆனால் பொலிஸார் இதுவரை அவரைக் கைது செய்யவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு