படகிலிருந்து இறக்கப்பட்டுக் கொண்டிருந்த கஞ்சா! இராணுவத்தினர் அதிரடி சுற்றிவளைப்பு, 45 கிலோ மீட்பு, படகில் தப்பி ஓடிய கடத்தல்காரர்கள்..

ஆசிரியர் - Editor I
படகிலிருந்து இறக்கப்பட்டுக் கொண்டிருந்த கஞ்சா! இராணுவத்தினர் அதிரடி சுற்றிவளைப்பு, 45 கிலோ மீட்பு, படகில் தப்பி ஓடிய கடத்தல்காரர்கள்..

யாழ்.பருத்தித்துறை - சக்கோட்டை பகுதியில் சுமார் 42 கிலோ கஞ்சா இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. 

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சக்கோட்டை கடற்கரையில் படகில் இருந்து கஞ்சப் பொதியை இறக்கிக் கொண்டிருந்தபோது 

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சுற்றுக் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படையினர் கஞ்சா பொதியை கைப்பற்றியுள்ளனர். 

படையினர் வருவதை அவதானித்த கஞ்சா கடத்தல் காரர்கள் ஒருசில பொதிகளை மட்டும் இறக்கிய நிலையில் மீண்டும் கடலால் படகு மூலம் சென்றுள்ளனர்.

தப்பிச் சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், 

கைப்பற்றப்பட்ட கஞ்சாவை மதுவரி திணைக்களத்தினூடாக நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு