யாழ்.சிறுப்பிட்டியில் வீடு உடைத்துக் கொள்ளை! 3 சந்தேகநபர்களை மடக்கியது பொலிஸ், சுமார் 6 லட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறுப்பிட்டியில் வீடு உடைத்துக் கொள்ளை! 3 சந்தேகநபர்களை மடக்கியது பொலிஸ், சுமார் 6 லட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்பு..

யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 2 மாதங்களுக்கு முன் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் சுமார்  லட்சம் வரை பெறுமதியான பொருட்களுடன் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

சிறுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்று கடந்த 2 மாதங்களுக்கு முன் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டு தளபாட பொருட்கள் களவாடப்பட்டன. 

வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் வசித்துவரும் நிலையில் குறித்த வீடானது வேறு ஒருவரின் கண்காணிப்பின் கீழ் உள்ளது. வீட்டினை பராமரிப்பவர் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களே வந்து வீட்டினை பார்வையிடுவார்.

இந்நிலையில் களவு இடம்பெற்றதையடுத்து வீட்டினை பராமரிப்பவரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த  முறைப்பாடு காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் கவனத்திற்கு சென்றது.  

முறைப்பாட்டின் அடிப்படையில் தீவிர விசாரணைகளில் களமிறங்கிய காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் புத்தூர், அச்செழு மற்றும் சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 3 பேரை நேற்று  கைது செய்துள்ளதுடன் களவாடப்பட்ட பொருட்களையும் மீட்டனர், 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் திருட்டு பொருட்களும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு