யாழ்.மாவட்டத்தில் போதை அடிமைகளால் பாதிக்கப்பட்டுள்ள 5 வயது சிறுமி!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் போதை அடிமைகளால் பாதிக்கப்பட்டுள்ள 5 வயது சிறுமி!

யாழ்.மாவட்டத்தில் 9 வயது சிறுமி உட்பட 5 பெண்கள் ஹெரோயின் பாவனைக்கு உள்ளாகி உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி ஏற்பாடு செய்த போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான துறைசார்ந்த அதிகாரிகளுடனான கலந்துரையாடலிலே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, யாழ்.மாவட்டத்திலுள்ள ஒரு பிரதேச செயலர் பிரிவில் சிறுமி ஒருவர் போதைப் பொருள் என அறியாமல் அதனை தொடர்ச்சியாக உற்கொண்டமையால் போதைக்கு அடிமையாகியுள்ளார்.

குறித்த சிறுமி போதைப் பொருளுக்கு எவ்வாறு அடிமையானார் என ஆராய்ந்தபோது போதைப் பொருள் பயன்படுத்துவோர் பயன்படுத்திய சில பொருட்களை தவறுதலாக கையாண்டு சிறுமி அதனை வாயில் வைத்துள்ளார். 

அதன் தொடர்ச்சியாக போதைப் பொருள் அடிமைகள் பயன்படுத்திய பொருட்களை குறித்த சிறுமி பயன்படுத்தியமை தொியவந்துள்ளது. 

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு