தொண்டைமானாற்றில் முதலைகள்! ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் நீராடுவது தொடர்பில் எச்சரிக்கை...

ஆசிரியர் - Editor I
தொண்டைமானாற்றில் முதலைகள்! ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் நீராடுவது தொடர்பில் எச்சரிக்கை...

யாழ்.தொண்டமனாறு ஆற்றில் முதலைகள் இருப்பது அறியப்பட்டிருக்கும் நிலையில் பக்தர்கள ஆற்றில் நீராடுவது தொடர்பில் அவதானமாக இருக்கும்படி கேட்கப்பட்டுள்ளனர். 

வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச் சன்னதி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி வெகு விமர்சையாக இடம் பெற்று வரும் நிலையில் அதிகளவு பக்தர்கள் முருகப்பெருமானை தரிசிக்க 

நாட்டின் பல பாகங்களிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் செல்வச் சந்நிதி ஆலயத்தின் பின்புறம் உள்ள ஆற்றில் நீராடும் அடியவர்களை அவதானமாக நீராடுமாறு செல்வச் சந்நிதி ஆலய நிர்வாகத்தினர்அறிவித்துள்ளனர்,

ஆற்றில் முதலைகள் இருப்பது தொடர்பில் தகவல் வந்துள்ளதன் காரணமாக ஆற்றில் நீராடும் போது ஆழமான பகுதிகளுக்கு சென்று நீராட வேண்டாம் என முருகன் அடியவர்களை கேட்டு கொள்வதோடு 

ஆற்றில் போடப்பட்டுள்ள மிதப்பு எல்லைகளுக்கு உள்ளேயும் அதேபோல் மிக அவதானமாகவும் நின்று உதவிக்கு ஆட்களுடன் நின்று மேற்பார்வை செய்து நீராடுமாறு கேட்டுக்கொள்கின்றோம் 

மிக மிக அவதானமாக நீராடுவதை கருத்தில் கொள்ளுமாறு சந்நிதியான் முருக பக்தர்களை மன்றாட்டமாக கேட்டுக்கொள்கின்றோம் என அறிவித்துள்ளனர்,

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு